`தமிழ்மொழியை அழித்துவிட்டு இந்தி மொழியைப் புகுத்துகிறார்கள்’ - கே.பாலகிருஷ்ணன் கடும் தாக்கு! | CPM state president slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (21/03/2019)

கடைசி தொடர்பு:12:55 (21/03/2019)

`தமிழ்மொழியை அழித்துவிட்டு இந்தி மொழியைப் புகுத்துகிறார்கள்’ - கே.பாலகிருஷ்ணன் கடும் தாக்கு!

`நான், ஹெச்.ராஜா போன்றவர்கள் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லுவது கிடையாது. இருந்தாலும் சொல்லுகிறேன். அவர் ஒரு அரைவேக்காடு’ என்று சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலகிருஷ்ணன்

சிவகங்கை வைர மகாலில் சிவகங்கை மாவட்ட அளவிலான பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆறுமாத காலமாக மாவட்ட கமிட்டி கலைக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சின்னதுரை நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் புதிய மாவட்டச் செயலாளராக வீரபாண்டித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். ``நடைபெறுகிற எம்.பி தேர்தலில் பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இங்கே நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. சி.பி.எம் தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பொருளாதார ஆய்வறிக்கை போன்றது. கடந்த 5 ஆண்டுகாலமாகத் தேர்தல் நேரத்தில் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் 15 லட்சம் பணம் போடுவேன் என்று சொன்னார். ஆனால், விவசாயிகளுக்கு 2,000 மட்டும் போட்டிருக்கிறார். எடப்பாடி அரசாங்கம் ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் 2,000 என அவர்கள் கூட்டணி 4,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ்மொழியை அழித்துவிட்டு இந்தி மொழியைப் புகுத்தி வருகிறார்கள். அதன் அடையாளம்தான் தேஜஸ் ரயில் என்ற பெயர்களெல்லாம். விவசாயிகள் கடன் தள்ளுபடி இல்லை. வேலை உருவாக்கிக் கொடுப்பதற்குப் பதிலாக வேலை பறிப்பு நடந்திருக்கிறது. ஊழல் மலிந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாகப் பொள்ளாச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க