``கொங்கு மண்டலம் தி.மு.க கூட்டணியின் கோட்டை" - ஈ.ஆர்.ஈஸ்வரன் சூளுரை | Kongu Belt is our Fort we prove it again - Eswaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:52 (25/03/2019)

``கொங்கு மண்டலம் தி.மு.க கூட்டணியின் கோட்டை" - ஈ.ஆர்.ஈஸ்வரன் சூளுரை

கொங்கு மண்டலம் தி.மு.க கூட்டணி கட்சியின் கோட்டை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவு நிரூபிக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கொங்கு ஈஸ்வரன்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்திசெல்வன், தி.மு.க கூட்டணி வேட்பாளரான சின்ராஜை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், `நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்போம். அதற்காக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்' என்றார்.

பின்னர் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், `தமிழகத்திலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.கவின் கோட்டை என கொங்கு மண்டலத்தை அவர்கள் கூறி வருகிறார்கள். அந்தப் பொய் பிரசாரம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுக்கு வரும். கொங்கு மண்டலம், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அரசியல் பயணம் இனி அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வுடன்தான் இருக்கும்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் திரும்பி உள்ளனர்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க