தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு - அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை! | 9 people including attack Pandi were sentenced to life imprisonment for dinakaran burning case

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:58 (21/03/2019)

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு - அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் மீதம் உள்ள நபர்களுக்கு குறிப்பிட்ட கால அளவில் சிறைத்தண்டனை வழங்கி மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் அலுவலகம் எரிப்பு

தி.மு.க., கட்சித் தொடர்பான கருத்துக்கணிப்பில் மு.க.அழகிரி குறித்து கருத்து தெரிவித்தற்காக அழகிரியின் ஆதரவாளர்கள், கடந்த 2007 மே மாதம் பெட்ரோல் குண்டு வீசி தினகரன் அலுவலகத்தை எரித்தனர். இதில் தினகரன் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கில் தி.மு.க முக்கிய பிரமுகர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதி மன்றம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்புகள் கிடைக்கவும் அதை எதிர்த்து. சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அட்டாக் பாண்டி

இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முக்கிய குற்றவாளிகள், சாட்சிகளை நீதிபதிகள் விசாரித்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர். அதன்படி நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணையில். மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் மீதம் உள்ள நபர்களுக்கு குறிப்பிட்ட கால அளவில் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். மேலும் பலியான 3 பேர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்துக்குள் இந்தத் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.