சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சியானவை! - தமிழக அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட் | 24 districts are drought affected districts says in tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (21/03/2019)

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சியானவை! - தமிழக அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. அதைத் தொடர்ந்து சென்னை உட்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வறட்சி - தமிழக அரசு அறிவிப்பு

இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில்

`தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்த மழையளவு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் அதிகமான பற்றாக்குறை எனப் பதிவாகி இருந்தது. இதனால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைவான அளவில் இருக்கிறது. இதனால் அவற்றை நீரியல் வளர்ச்சி ஏற்படும் மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன. 

அதுபோல குறைவான மழைப்பொழிவைப் பெற்ற சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன'

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.