தி.மு.க கோரிக்கைக்குச் செவிசாய்க்காத ம.தி.மு.க - தனிச் சின்னத்தில் கணேசமூர்த்தி! | MDMK, which does not listen to DMK demand

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:53 (25/03/2019)

தி.மு.க கோரிக்கைக்குச் செவிசாய்க்காத ம.தி.மு.க - தனிச் சின்னத்தில் கணேசமூர்த்தி!

ஈரோட்டில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார் என்பது குறித்து வைகோ அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இதில், ஈரோடு தொகுதி ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளராக ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடயிருக்கிறார். கூட்டணிக் கட்சிகள் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அதே வேளையில் சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்குப் பானைச் சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. 

கணேசமூர்த்தி

வி.சி.க-வைப்போல் ம.தி.மு.க-வையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அதை மறுத்துவிட்டார். சின்னம் தொடர்பாக ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்தியை அவரது வீட்டுக்கே சென்று சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் களநிலவரங்களை விளக்கினர். ஆனால், அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் இன்று வைகோ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் `கணேஷமூர்த்தி தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் முடிந்த பிறகு, தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் ஈரோட்டில் கணேசமூர்த்தி போட்டியிடுவார்’ என அறிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க