`கொடிக்கம்பங்கள், பீடங்கள் உடனடியாக அகற்றப்படும்!’ - குமரி கலெக்டர் அதிரடி அறிவிப்பு | election 2019 ; kumari collector order to political parties

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:54 (25/03/2019)

`கொடிக்கம்பங்கள், பீடங்கள் உடனடியாக அகற்றப்படும்!’ - குமரி கலெக்டர் அதிரடி அறிவிப்பு

தேர்தல் விதிமுறையால் மறைக்கப்பட்ட மற்றும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கொடிகம்பங்களும் பீடங்களும் அகற்றப்படும் எனக் கன்னியாகுமரி மாவட்டக் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறையால் மறைக்கப்பட்ட மற்றும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களும் பீடங்களும் அகற்றப்படும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரசாந்த் மு.வடநேரே

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ``பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 10.03.2019 அன்று வெளியிடப்பட்டது. அன்று முதலே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடிமரங்களை அகற்ற வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் நிறுவப்படுவதை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்ததன் பேரில், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனுமதி, உரிமம் இல்லாமல் பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளதால் அவற்றை அமைக்க அனுமதியில்லை.

பிரசாந்த் மு.வடநேரே

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தி நிலவர அறிக்கையை 25.03.2019-க்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, மாவட்டத்தின் மூன்று நகராட்சி, 55 பேரூராட்சி, 95 கிராம ஊராட்சி பகுதிகளிலும் மறைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், கொடிக்கம்ப பீடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் அனுமதியின்றி பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கொடிக்கம்பங்கள், பீடங்களை உடனடியாக அகற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 23.03.2019-க்குள் மாவட்ட ஆட்சித்தலைவருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.