பொள்ளாச்சி விவகாரம் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்! | Pollachi Sexual Assault Case CBCID Police issues summon to mayura jeyakumar

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:43 (25/03/2019)

பொள்ளாச்சி விவகாரம் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்!

``பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.’’

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்

 

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பிய நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி, என்னைக் காரில் அழைத்துச் சென்று மிரட்டினார்கள் என்று கல்லூரி மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், அன்றைய தினம் நான் பொள்ளாச்சியிலேயே இல்லை. காங்கிரஸ் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற மயூரா ஜெயக்குமாருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனது அப்பாவோடு கோவைக்குச் சென்றிருந்தேன்’ என  சி.பி.சி.ஐ.டி விசாரணையில் திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதற்காகத் திருநாவுக்கரசுவும் அவருடைய அப்பா கனகராஜும் 12-ம் தேதி, மயூரா ஜெயக்குமாரை சந்திக்க வந்தார்களா எனத் தெரிந்துகொள்ளவதற்காக மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறது சி.பி.சி.ஐ.டி வட்டாரம். திருநாவுக்கரசனின் அப்பா கனகராஜ் காங்கிரஸ் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க