`` `தளபதி’ படம்தான் என் ஆல்டைம் ஃபேவரைட்!’’ - பாம்பே ஜெயஸ்ரீ | thalapathy film is my all time favourite movies says singer bombay jayashree

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:15:34 (21/03/2019)

`` `தளபதி’ படம்தான் என் ஆல்டைம் ஃபேவரைட்!’’ - பாம்பே ஜெயஸ்ரீ

ர்னாடக இசை மற்றும் சினிமா இசைப் பாடகியாக ஒருசேரப் புகழ்பெற்றவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர், தன் இசைப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்...

பாம்பே ஜெயஶ்ரீ

 

``ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கிறபோது, வகுப்புகளில் தவறாம என்னைப் பாடச் சொல்லுவாங்க. குறிப்பா, 30 நிமிட வகுப்புக்குப் பிறகு, `கடைசி இந்த 10 நிமிஷம் நீ பாடு. நாங்க கேட்கிறோம்’னு பேராசிரியர்களே சொல்லுவாங்க. இதனால், எனக்குள் தன்னம்பிக்கை அதிகரிச்சுது. கர்னாடக இசை என் வாழ்க்கையானது. என் குருநாதர்களின் ஆசீர்வாதம் மற்றும் மக்கள் அன்பால், இசைப்பயணம் நல்லபடியா போகுது. குறிப்பா, சினிமா பின்னணிப் பாடகியான பிறகு, மக்களிடம் இன்னும் பரிச்சயமானேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அதிகம் பாடியிருக்கிறேன். அவர் இசையில பாடப்போனால், `உங்களுக்கு என்ன ஸ்ருதி வேணுமோ அதில் பாடுங்க’னு சொல்வார். அந்த சாய்ஸ், பாடகர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதனால் என் முழுத் திருப்தியுடன் பாடுவேன். பட்டுப் புடவை, ஜிமிக்கி, மல்லிகைப் பூ... இவைதான் கர்னாடக இசைப் பாடகிகளின் முதல் அடையாளம். இப்படிக் கச்சேரிக்குப் போகும்போது, விவரிக்க முடியாத உற்சாக உணர்வு எங்களுக்குள் உண்டாகும். அதனால் எங்கள் பாடலைத் தாண்டி, நாங்களும் ரசிகர்கள் மனதில் எளிதில் நுழைகிறோம்’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்.

பாம்பே ஜெயஶ்ரீ

``பின்னணிப் பாடியதில் மிகவும் பிடித்த பாடல்?’’

``நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா (`பாரதி' படம்)’’

``சினிமா படங்களை அதிகம் பார்ப்பீங்களா?’’

``ரொம்பவே அபூர்வம்தான்! ஆனா, `தளபதி’ படம் என் ஆல் டைம் ஃபேவரைட்.
 
``உங்களுக்குப் பிடித்த கர்னாடக இசை மற்றும் சினிமா இசைக் கலைஞர்கள் யார்?’’ 

``கர்னாட இசையில், என் குருநாதர் ஜெயராமன். சினிமா இசையில், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே மற்றும் இசையமைப்பாளர் மதன் மோகன்.’’