”மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்... வெற்றிபெறுவேன்!” – மக்கள் நீதி மய்யம் தேனி வேட்பாளர் | I will trusting people says makkal needhi maiam theni candidate Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (25/03/2019)

”மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்... வெற்றிபெறுவேன்!” – மக்கள் நீதி மய்யம் தேனி வேட்பாளர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக, போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கம்லஹாசன்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். தி.மு.க கூட்டணி, அ.ம.மு.க சார்பில் வலுவான வேட்பாளர்கள் களம் காண இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நிறுத்தப்பட இருக்கும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “என்னோடு சேர்ந்து தேனியிலிருந்து ஆறு பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர். தேனி மாவட்டத்தைப் பற்றியும், அங்கு  தீர்க்கப்படவேண்டிய முக்கியப் பிரச்னைகள் பற்றியும் கூறினேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்

எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தேனி மாவட்ட மக்களிடம் வைக்கும் வாக்குறுதிகளாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தப் பாடுபடுவேன். மதுரை – போடி அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்கப் போராடுவேன். பெரியகுளம் பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை, கம்பத்தில் அரசு ஒயின் தொழிற்சாலை மற்றும் உணவுப்பொருள்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுப்பேன். தலைமை அறிவித்ததும் வேட்புமனு தாக்கல் செய்வேன். மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்... வெற்றிபெறுவேன்!” என்றார்.