`எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் கமல்? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் சஸ்பென்ஸ் | kamal may contest lokshabha election

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:56 (25/03/2019)

`எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் கமல்? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் சஸ்பென்ஸ்

கமல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள்  கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில், அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றிரண்டு கட்சிகள் அறிவிக்காமல் உள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்றவை தனித்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதனைத் தொடர்ந்து, மக்கள்  நீதி மய்யக்  கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள்,  தொழிலதிபர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.முதற்கட்ட  வேட்பாளர்கள்  பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும்  அந்தக் கட்சியில் சிநேகன் மற்றும் ஸ்ரீபிரியாவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மேலும் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படலாம் என அந்தக் கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

மேலும் பேசியவர், 'கமல் எந்தத் தொகுதியில் நிற்கப்போகிறார் என்பதுகுறித்து இன்னும் தெரியவில்லை, அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்பது தெரியவில்லை. அவ்வாறு போட்டியிட்டால், கோவையில் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். இதற்கிடையே, ராமநாதபுரம் மற்றும் திருச்சி போன்ற தொகுதிகளையும் கமல் தேர்வுசெய்யலாம் என்று கூறப்படுகிறது.