உடைந்த கண்ணாடித் துண்டுகளின்மீது அரை மணி நேரம் பரதம்! - கடலூர் மாணவி சாதனை | cuddalore college girl achieve world record

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (21/03/2019)

உடைந்த கண்ணாடித் துண்டுகளின்மீது அரை மணி நேரம் பரதம்! - கடலூர் மாணவி சாதனை

கண்ணாடித் துண்டுகள்மீது நடனம் ஆடுவதற்கு முன்பே பயிற்சிகள் எடுத்தாலும், குறிப்பிட்ட சமயத்தில் மனசும் உடலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும்.

கண்ணாடித் துண்டுகள்மீது அரைமணி நேரம் பரதம் ஆடி, 'செம்பியன் வேர்ல்டு ரெக்கார்டு' என்ற உலக சாதனை படைத்துள்ளார் கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஏஞ்சலின் ஷெரில். இதுகுறித்து ஏஞ்சலினிடம் பேசினோம்.

பரதம்

"எனக்கு நடனம்தான் வாழ்க்கை. சிறுவயதில் நடனத்தின்மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, எல்லா வகையான நடனங்களையும் தீவிரமாகக் கத்துக்கிட்டேன்.தமிழக பாரம்பர்யக் கலைகளில் எண்பது வகையான கலைகள் தெரியும். நடனத்தில் இதுவரை 12 உலக சாதனைகள் படைத்துள்ளேன். அதில் ஒரு பகுதிதான் கண்ணாடித் துண்டுகள்மீது நடனம் ஆடியது. கண்ணாடித்துண்டுகள்மீது நடனம் ஆடுவதற்கு முன்பே பயிற்சிகள் எடுத்தாலும், குறிப்பிட்ட சமயத்தில் மனசும் உடலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும்.

கண்ணாடித் துண்டுகளின்மீது நடனம் ஆடும்போது பிளாஸ்டிக் வளையத்தை உடலில் சுற்றிக்கொண்டே , வளையம் கீழே விழாமல் ஆடியதுதான் இந்தச் சாதனையின் ஹைலைட் அடுத்தபடியாக, கின்னஸ் சாதனைக்கு 7 மணி நேரம் தொடர் நடனம் செய்ய பயிற்சி எடுத்து வருகிறேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக நடனப் பயிற்சிகள் எடுத்துவருவதோடு, பள்ளிக் குழந்தைகளையும் உலக சாதனைகளுக்குத் தயார்செய்து வருகிறேன். சாதனைகள் தொடரும்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.