மிசோரம் முன்னாள் கவர்னர்; முன்னாள் மத்திய அமைச்சருக்கு சீட் - கேரள பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்! | bjp candidates announce for loksabha Election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:58 (25/03/2019)

மிசோரம் முன்னாள் கவர்னர்; முன்னாள் மத்திய அமைச்சருக்கு சீட் - கேரள பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்!

கேரள மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் மற்றும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

கும்மனம் ராஜசேகரன்


கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சி.கே.பத்மநாபன், வடகரா தொகுதி வேட்பாளராக சஜீவன், மலப்புரம் வேட்பாளராக உண்ணிகிருஷ்ணன், பாலக்காடு தொகுதிக்கு கிருஷ்ணகுமார், சாலக்குடிக்கு ஏன்.என்.ராதாகிருஷ்ணன்,

அல்போன்ஸ் கண்ணந்தானம்

கொல்லம் தொகுதிக்கு ஷாபு வர்க்கீஸ், ஆலப்புழா கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,  ஆற்றிங்கல் ஷோபா சுரேந்திரன், பொன்னானி தொகுதிக்கு வி.டி.ரமா, காசர்கோடு தொகுதிக்கு ரவீச தந்திரி, திருவனந்தபுரம் தொகுதிக்கு மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், எர்ணாகுளம் தொகுதிக்கு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம்,  ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை இருக்கும் பத்தனம்திட்டா தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் முதற்கட்ட பட்டியலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. கேரள தலைநகரான திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.