சேலம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளுக்கு 47 ஆண்டு கடுங்காவல்! | Salem sexual harassment case convicted 47 years of sentence

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:23:13 (21/03/2019)

சேலம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளுக்கு 47 ஆண்டு கடுங்காவல்!

தமிழகத்தையே உலுக்கிய சேலம் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் படுகொலை வழக்கில், இன்று சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா 2 ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுக்கால கடுங்காவல் தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும். கட்டத் தவறினால் 3 ஆண்டுகள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாலியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம் தம்பதி. இவரது மகள் வயது 10. இவர், அரசு துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார்.  கடந்த 2014 பிப்ரவரி 14-ம் தேதி இரவு, அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நிர்வாகி பூபதி, சினேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோரால் இரவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.

நீதிமன்றம்


இந்த வழக்கு, 2014ல் இருந்து சேலம் மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தனசேகரன் நடத்திவந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பின் விவரம்:
1. 120பி -கூட்டுச் சதி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.  
2. 450 -வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை,  5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.
3. 363 -தந்தையிடமிருந்து சிறுமி கடத்தல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.
4. 366 - கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சி -10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.  
5. 302 - கொலை வழக்கு ஆயுள் தண்டனை 5000 அபராதம்.
6. 404 - இறந்தவரின் உடைமையை கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.
7. 201 -தடயங்கள் அழித்தல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை.
8. போக்சோ 5 குற்றம், 6 தண்டனை வழக்கில் ஆயுள் தண்டனை.

தீர்ப்பைப் பற்றி பரமசிவம், ''என் மகளைக் கொன்ற பாவிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் என் குழந்தையை இழந்தது இழந்ததுதான். நான் மரணம் அடையும் வரை என் மகளின் நினைவுகள் என்னை விட்டு நீங்காது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். அவுங்க செஞ்ச பாவம் அவர்களை சும்மா விடாது. ஒரு உயிரின் வலியை உணர்ந்திருக்கிறேன். எனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க