ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராகக் களமிறங்கும் தங்க தமிழ்ச்செல்வன் - வெளியானது அ.ம.மு.க-வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் | The candidate list of AMMK released

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:08:20 (22/03/2019)

ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராகக் களமிறங்கும் தங்க தமிழ்ச்செல்வன் - வெளியானது அ.ம.மு.க-வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகியுள்ளது.

தினகரன்

வரும் 17 வது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சார்பில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 17-ம் தேதி வெளியிட்டார். அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேனித் தொகுதி இடம்பெறவில்லை. மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலும் வெளியானது.

தங்க தமிழ்செல்வன்

இந்நிலையில், தற்போது இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தினகரன் வெளியிட்டிருக்கிறார். தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட உள்ளார். அவர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எதிராகக் களமிறங்கவுள்ளார். கன்னியாகுமரித் தொகுதியில் லெட்சுமணன், வேலூர்த் தொகுதியில் பாண்டுரங்கண், வடசென்னைத் தொகுதியில் சந்தான கிருஷ்ணன், அரக்கோணத்தில் பார்த்திபன், கிருஷ்ணகிரியில் கணேசகுமார், தருமபுரியில் பழனியப்பன், திருவண்ணாமலையில் ஞானசேகர், ஆரணியில் செந்தமிழன் ஆகியோர் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகின்றனர். 

வேட்பாளர் பட்டியல்

அதேபோன்று கள்ளக்குறிச்சித் தொகுதியில் கோமுகி மணியனும், திண்டுக்கல் தொகுதியில் ஜோதிமுருகனும், கடலூரில் கார்த்திக்கும், விருநகரில் பரமசிவ ஐயப்பனும், தூத்துக்குடியில் புவனேஸ்வரனும் வேட்பாளர்களாகக் களம் இறங்கவுள்ளனர். 

வேட்பாளர் பட்டியல்

அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. சோளிங்கர் தொகுதியில் மணி, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் ராஜேந்திரன், நிலக்கோட்டையில்  தங்கதுரை, திருவாரூரில் எஸ்.காமராஜ், தஞ்சாவூரில் ரெங்கசாமி, ஆண்டிபட்டியில் ஜெயக்குமார், பெரியகுளம் தொகுதியில் கதிர்காமு, விளாத்திகுளம் தொகுதியில் ஜோதிமணி, தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) முருகசாமி ஆகியோர் அ.ம.மு.க சார்பில் களம் காணவுள்ளனர்.