திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை ரத்துசெய்த பறக்கும்படை! | Flying force cancelled in MNM Meeting at Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:09:00 (22/03/2019)

திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை ரத்துசெய்த பறக்கும்படை!

திண்டுக்கல்லில் நேற்று நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தேர்தல் பறக்கும்படையினரால் ரத்து செய்யப்பட்டது.

மக்கள் நீதி மையத்தின் கூட்டம் ரத்து

திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் சுதாகரன் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் மருத்துவராக இருக்கும் இவரை வேட்பாளராக அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்திருந்தது. தனியார் திருமண மண்டபம் அருகில் ஒரு சிறிய இடத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டத்துக்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்பதால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.

 மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை அழைத்து, அனுமதியின்றிக் கூட்டம் நடத்தவும் கொடிகள் கட்டவும், ஆள் திரட்டவும் கூடாது என அறிவுறுத்தினார்கள். இதனால் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொண்டர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகள் இறக்கப்பட்டன. அனுமதியின்றிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த கட்சியின் நிர்வாகிகளைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடந்த முதல் கூட்டமே ஒத்தி வைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க