நீலகிரியில் 7 டன் கலப்படத் தேயிலைத்தூள் - பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை! | Duplicate tea dust

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (22/03/2019)

நீலகிரியில் 7 டன் கலப்படத் தேயிலைத்தூள் - பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 7 டன் கலப்படத் தேயிலைத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை

கோத்தகிரியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட கலப்படத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்க பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரியை, தேர்தல் பறக்கும்படையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 7 டன் எடை கொண்ட கலப்படத் தேயிலைத்தூள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தேயிலை

லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்துத் தேயிலை வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். மேலும் லாரியில் வந்த சந்தோஷ் மற்றும் முருகேஷ்  என்பவர்களிடம் தேயிலை வாரிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.