``அ.தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை” - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றச்சாட்டு | Rajakannappan met press at sivagangai district

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (22/03/2019)

கடைசி தொடர்பு:13:46 (22/03/2019)

``அ.தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை” - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றச்சாட்டு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பனை காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அவரோடு முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், தென்னவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ராஜகண்ணப்பன்


அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கண்ணப்பன், ``நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட உள்ளார். மானாமதுரை இடைத்தேர்தல் இலக்கியதாசன் வெற்றி பெறுவதற்கு நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று யாதவர்களைக் கேட்டுக்கொண்டார். வருகிற 25-ம் தேதி வேலூரில் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் 18-ல் 13 தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றாலே ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கான கணக்கு என்னிடம் உள்ளது. அ.தி.மு.க-வில் ஐனநாயகம் இல்லை. வாரிசு அரசியல் இருக்கலாம் ஆனால், அதற்கு என்று காலகட்டம் உள்ளது. எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை பா.மா.க வுக்குக் கொடுத்தது தவறு. உட்கட்சி ஜனநாயகம் இல்லை அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அ.தி.மு.க-வில் தொண்டர்கள் யாரும் இல்லை. மந்திரிகளும் நிர்வாகிகளும் தன்னிச்சையாக முடிவெடுப்பதால், மூத்த நிர்வாகிகளை மதிக்காததால் வெளியேறி வந்தேன். இது நிலைக்காது. தமிழ்நாடு திராவிட இயக்க பூமி, தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பற்ற தன்மையுள்ள கட்சியைதான் ஆதரிப்பார்கள். முக்கிய தலைவர்கள் சிறுமைப்படுத்தி உள்ளனர். அ.ம.மு.க, கமல், வேல்முருகன் என தனிக் கட்சி நடத்துபவர்களை பற்றி எங்களுக்குக் கவலை இல்லை, அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க-வை எங்களிடம் ஒப்படைத்தால்  நடத்துவோம். காங்கிரஸ், தி.மு.க ஒளிவு  மறைவு இல்லாத கூட்டணி. அ.தி.மு.க-வில் ரகசிய கூட்டணி. சிறுபான்மையினர் உள்ளிட்ட எல்லா சமுதாயத்துக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. வெற்றி தோல்வியை மக்கள்தான் முடிவு செய்வார்கள்” என்று முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க