``பா.ஜ.க-வுக்காக பிரசாரம் செய்வேன்; ஆனால் தமிழிசைக்கு மாட்டேன்!” - காரணம் சொல்லும் விசு | I Wont Support Tamilisai - Director Visu

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (22/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (22/03/2019)

``பா.ஜ.க-வுக்காக பிரசாரம் செய்வேன்; ஆனால் தமிழிசைக்கு மாட்டேன்!” - காரணம் சொல்லும் விசு

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள், தொகுதிப்பங்கீடுகள், வேட்பாளர்கள் அறிவிப்புகள் எல்லாம் முடிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்திற்குத் தயாராகிவிட்டன. குறிப்பிட்ட கட்சியின் மீது அபிமானம் உள்ள சினிமாப் பிரபலங்களும் பிரசார பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சூழலில் இயக்குநரும் நடிகருமான விசு நம்மிடைய ஒரு கருத்தை பகிர விரும்பிப் பேசினார்.

விசு

``நான் சத்தியத்துக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டவன் என்பதால் பா.ஜ.க-வில் இணைந்தேன். கட்சியில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசையை சந்திக்க முடியவில்லை. இந்தச் சூழலில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைத்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ நான் ஒரு பிரபலமாக இருக்கிறேன். என்னாலேயே தமிழிசையைச் சந்திக்க முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அவரை சந்திக்க முடியும். எந்த நம்பிக்கையில் அவரை ஆதரித்து என்னால் பிரசாரம் செய்ய இயலும்.

தமிழிசை

ஆனால், பா.ஜ.கவை ஆதரித்து பிரசாரம் செய்வேன். அது தமிழிசைக்காக அல்ல. நாடு நல்ல திசையை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கு காரணகர்த்தாவாக இருக்கக்கூடிய மோடிக்காகவும், வாழும் காமராஜர் பொன். ராதாகிருஷ்ணனுக்காகவும் பிரசாரம் செய்வேன்.

விசு

தர்மம் வெல்லும். தர்மமே வெல்லும்" என அழுத்தமான குரலில் பேசி முடித்தார்.