`வேட்பாளருக்கு எதுவும் தெரியாது; டிரைனிங் கொடுத்து பேச வைக்கிறேன்!'- பத்திரிகையாளர்களிடம் மழுப்பிய அ.தி.மு.க மா.செ. | We have to train Admk candidate for speech

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (22/03/2019)

கடைசி தொடர்பு:16:52 (22/03/2019)

`வேட்பாளருக்கு எதுவும் தெரியாது; டிரைனிங் கொடுத்து பேச வைக்கிறேன்!'- பத்திரிகையாளர்களிடம் மழுப்பிய அ.தி.மு.க மா.செ.

நீலகிரி தனித் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சியினர் புடைசூழ ஆனந்தகிரியிலிருந்து எட்டின்ஸ் சாலை வழியாக வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊட்டி கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அதிமுக வேட்பாளர் தியாகராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கலெக்டர் அலுவலக வாயிலுக்குள் அ.தி.மு.க வேட்பாளர் எம்.தியாகராஜன், எம்.பி.கள் அர்ஜுணன், செல்வராஜ், கோபாலகிருஷ்ணண் மாவட்டச் செயலாளர் புத்திச்சந்திரன் என ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த டி.எஸ்.பி சிவக்குமார், அவர்களை தடுத்து வேட்பாளர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க முடியும் என்று கூறினார். அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளர் தியாகராஜன் போலீஸூடன் வாக்குவாதம்

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர்கள் பேட்டி காண முயன்றனர். பத்திரிகையாளர்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்காத நிலையில் அவருடன் இருந்த எம்.பி. செல்வராஜ் பதிலளித்தார். அதற்கு பத்திரிகையாளர்கள் வேட்பாளரை பதில் சொல்லச் சொல்லுங்கள் என்றனர்.

காவல்நிலையத்தில் திரண்ட அதிமுக தொண்டர்கள்

அப்போது, வேட்பாளர் தியாகராஜன் உடன் இருந்தவர்கள் அவரை அழைத்துக்கொண்டு தொண்டர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். பிறகு மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன் பத்திரிகையாளர்கள் ஒரு சிலரை அழைத்து, `அவர் கீழ் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு தொகுதி குறித்து எதுவும் தெரியாது. தொண்டர்கள் கூட்டம் கலைந்ததும், நான் உங்களை அழைக்கிறேன். அதற்குள் அவருக்கு டிரைனிங் கொடுத்து விடுகிறேன். பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.