`அந்த 7 லட்சம் வாக்குகள் ஏன் எனக்கு விழக்கூடாது!'- புதிய கட்சி தொடங்கிய ராஜேஷ்வரி ஆசை | Rajeshwari priya start new political party

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:10 (22/03/2019)

`அந்த 7 லட்சம் வாக்குகள் ஏன் எனக்கு விழக்கூடாது!'- புதிய கட்சி தொடங்கிய ராஜேஷ்வரி ஆசை

ராஜேஸ்வரி பிரியா  தேர்தல்

தேர்தல் குறித்தான அறிவிப்புக்கு முன்புவரை அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி அமைத்து அந்தக் கட்சியுடன் ஐக்கியமாகி விட்டது. பா.ம.க-வின் இந்த மூவ்மென்டஸ் பிடிக்காமல் அதிருப்தியடைந்த அந்தக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருந்த ராஜேஷ்வரி பிரியா பா.ம.க-விலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். அதேபோன்று மாநில துணைத் தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித், அக்கட்சியிலிருந்து விலகி டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையும் சந்திக்க உள்ளார். இது குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அ.தி.மு.க, தி.மு.க இரண்டு பெரிய கட்சிகளை நீங்கள் வீழ்த்த முடியும். எதை முன் நிறுத்தி களம் இறங்குறீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறேன். நான் தற்போது தென் சென்னையில் போட்டியிடுகிறேன். அதே போன்ற எங்களுடைய  கட்சி சார்பில் மயிலாடுதுறையிலும் தேர்தலில் போட்டியிட வேட்பாளரை அறிவித்துள்ளேன். நான் வசித்து வருகிற தொகுதிகளில் இருந்த பல்வேறு பிரச்னைகளைத் தீர்வு தேடித் தந்துள்ளேன். இந்தத் தொகுதியில் 19 லட்சம் வாக்குகள் உள்ளன. அதில் 10 லட்சம் வாக்குகள்தான் பதிவாகியுள்ளன. அதில் 7 லட்சம் பேர் தங்களுடைய வாக்குகளைப் போடவே இல்லை. கடந்த ஆண்டு போடாத அந்த 7 லட்சம் வாக்குகள் ஏன் ராஜேஷ்வரிக்கு விழக் கூடாது. ஓட்டுப் போடாமல் விரக்தியில் இருந்தவர்களின் வாக்குகளும் எனக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் அரசியலுக்கு எப்போது வந்தோம் என்பது முக்கியமல்ல; மக்களின் மனங்களை எப்படி வெல்ல முடியும் என்பதே தேர்தல் என்பது மக்களின்  மைண்ட் வாய்ஸ். அ.தி.மு.க,  தி.மு.க  இந்த இரண்டு கட்சிகளுக்கானது மட்டுமல்ல, மக்கள் நினைத்தால் அவர்களுக்குப்  பொருத்தமானவரை தேர்ந்தெடுக்க முடியும்" என்றார்