‘காட்பாடியின் கட்டபொம்மன் துரைமுருகன்!’ - தி.மு.க தொண்டர்கள் நகைச்சுவை | 'Kattabomman Duraimurugan!' - DMK Volunteers Comedy

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (22/03/2019)

‘காட்பாடியின் கட்டபொம்மன் துரைமுருகன்!’ - தி.மு.க தொண்டர்கள் நகைச்சுவை

‘காட்பாடியின் கட்டபொம்மன் துரைமுருகன்’ என்று தி.மு.க தொண்டர்கள் நகைச்சுவையாகப் புகழ்ந்துபாடுவதால், அவரின் மகன் வாக்கு சேகரிக்கும் இடங்களில் கலகலப்பு காணப்படுகிறது.

துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க வேட்பாளரான கதிர்ஆனந்த், தீவிர பிரசாரம் செய்துவருகிறார். கதிர்ஆனந்துக்காக, உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் நாளாக இன்றும் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரசாரம் நடைபெறும் இடங்களில் கூடும் தொண்டர்கள், தி.மு.க பொருளாளர் துரைமுருகனை ‘காட்பாடியின் கட்டபொம்மன்’ என்று புகழ்கின்றனர். இதனால், கலகலப்புடன் பிரசாரப் பயணம் தொடர்கிறது.

இதுபற்றி தி.மு.க-வினர் கூறுகையில், ‘‘துரைமுருகனை, மண்ணின் மைந்தர் என்று சொல்கிறோம். அண்ணனின் நடை, பேச்சின் பாவனைகளைப் பார்த்தால் கட்டபொம்மனைப் போல தெரிகிறார். அதனால், காட்பாடியின் கட்டபொம்மன் என்று அழைக்கிறோம்’’ என்றனர். துரைமுருகனின் மகனை, என்ன சொல்லி அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘அவர் குட்டி பொம்மன்’ என்று நகைச்சுவையாகக் கூறினர்.

துரைமுருகனைப் போலவே, அவரின் மகன் கதிர்ஆனந்தும் வாக்காளர்களை ஈர்க்கும்வகையில் பேசிவருகிறார். ‘‘ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி, தொகுதி முழுவதும் பட்டிதொட்டி கிராமங்களுக்கும் கொண்டுசென்று சேர்ப்பேன். நெசவாளர் பூங்கா அமைப்பேன். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அமைப்பேன்’’ என்று வேலூர் மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்.