100 பேர் இதுவரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல்! - ஆரம்பமானது தேர்தல் திருவிழா! | More than a hundred people have filed nominations for forty seats in Tamil Nadu for the parliamentary elections.

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (22/03/2019)

100 பேர் இதுவரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல்! - ஆரம்பமானது தேர்தல் திருவிழா!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது; தமிழகத்தின்  40 தொகுதிகளுக்கும் இதுவரை நூறுக்கும் அதிகமானோர்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரம் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாடெங்கும் பிரசாரக் களமாக உள்ளது. வாக்குறுதிகள், அறிக்கைகள், வேட்பாளர்கள் எனத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் பல இடங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், முன்னதாகவே வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க தலைமையில் இதுவரை கூட்டணிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. 

                                                                              தேர்தல் வேட்புமனு  கொடுத்தவர்கள்

பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 100 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், 91பேர் ஆண்களும், 9 பெண்களும் உள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 26 தொகுதிகளில்100 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்னும் சில தொகுதிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.