விகடன் பிரசுரம், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் `நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ - மதுரையில் தொடங்கியது! | Madurai event started for students with IAS dreams

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (23/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (23/03/2019)

விகடன் பிரசுரம், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் `நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ - மதுரையில் தொடங்கியது!

விகடன் பிரசுரமும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து நடத்தும் `நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்' எனும் நிகழ்ச்சி, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் சற்று முன் உற்சாகமாகத் தொடங்கியது.

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்' எனும் நிகழ்ச்சி

இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் விகடன் பிரசுரத்தின் சார்பில் இயர் புக், ஸ்னாக்ஸ், காலண்டர்கள் வழங்கப்பட்டது.

ப்ளஸ் டூ முடித்தவுடன் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களிடம் இந்திய ஆட்சிப்பணிக்குச் செல்லும் தன்னம்பிக்கையும் விதைத்தும், அதற்காக வழிகாட்டவும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் விகடனும் இணைந்து தொடர்ந்து இதுபோன்ற வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த அடிப்படையில் மதுரையிலும் இன்று நடைபெறுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் விகடன் பிரசுர நிர்வாகி ரங்கராஜனின் வரவேற்பு உரைக்குப்பின் ஏடிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுடன் உரையாடத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க