அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பா கரன்ஸிகள்!- கோவையில் அதிர்ந்த தேர்தல் பறக்கும் படை | foreign currency seized in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (23/03/2019)

கடைசி தொடர்பு:15:45 (23/03/2019)

அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பா கரன்ஸிகள்!- கோவையில் அதிர்ந்த தேர்தல் பறக்கும் படை

கோவையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய 43, 44, 900 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

பணம்

கோவை ஓண்டிபுதூர் பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது, ஹோண்டா ஆக்டிவா பைக்கில் அங்கு வந்த ஒருவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம், அமெரிக்க நாட்டு பணம் 35,000 டாலர், சிங்கப்பூர் பணம் 22,000 டாலர், 10,000 யூரோ கரன்ஸி இருப்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு 43,44,900 ரூபாயாகும். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்றும், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஸ் வேர்ல்டு மணி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். இது நிறுவனத்தின் பணம் என்றும் விமானநிலையம் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்தப் பணத்துக்கு நிறுவனத்தின் சார்பில் உரிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறிய ஜெயராம், பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களையும் ஒப்படைத்தார். எனினும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதால், அந்தப் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரித்துறையிடம் உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.