பொதுத்தேர்தல் மக்கள் தீர்ப்பு புத்தகம் வெளியீடு! | General election, public opinion book release

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (23/03/2019)

பொதுத்தேர்தல் மக்கள் தீர்ப்பு புத்தகம் வெளியீடு!

சென்னை சாஸ்திரி பவனில், மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தலுக்கான பொதுத் தேர்தல், மக்கள் தீர்ப்பு தகவல் கையேடு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் புத்தகத்தைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டர். வெளியிடும்பொழுது தென்மண்டல பத்திரிகை தகவல் அலுவலக தலைவர் மாரியப்பன் உடனிருந்தார். 

சத்யபிரதா சாஹு புத்தகத்தை வெளியிட்டார்

இந்த ஆண்டு முழுமையான வாக்குப்பதிவு நடைபெறத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு பெறும் வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும், முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் பலவகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார். 

மேலும் வெளியிட்ட புத்தகத்தில், 1951 முதல் 2014 வரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் விவரங்கள் ஆண்டுவாரியாகவும், தமிழகத்தில் உள்ள தொகுதிவாரியாகவும் அனைத்து விவரங்களையும் கொண்டுள்ளது. எந்த தொகுதிகளில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை வாக்காளர்கள் வாக்களித்தனர், எத்தனை சதவிகித வாக்குப் பதிவானது, எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அவர்களில் வெற்றியடைந்தவர்கள் எத்தனை நபர்கள், தோற்றவர்களின் விவரங்கள் என்ன என்ற தகவல்களைக் கொண்டுள்ளது. 

வெளியிடப்பட்ட தேர்தல் தகவல் புத்தகம்

மேலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிவாரியான வாக்காளர்களின் விவரங்கள், அந்த அந்த தொகுதிக்கு எந்தெந்த ஊர்கள் வருகிறது என்ற தகவல்களை 1951 முதல் 2014 வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் விவரமாகவும், வரைகலைகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை http://www.pib.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.