சிவகங்கை அருகே பள்ளிவாகனத்தில் மூச்சு திணறி மாணவிகள் மயக்கம்! | Girls are faint by Strain the breath in Sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (23/03/2019)

சிவகங்கை அருகே பள்ளிவாகனத்தில் மூச்சு திணறி மாணவிகள் மயக்கம்!

சிவகங்கை அருகே பள்ளி மாணவிகளை அதிகமாக ஏற்றிச் சென்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகள்

சிவகங்கையை அடுத்து சோழபுரத்தில் இயங்கி வருகிறது ரமணவிகாஸ் பள்ளி.  இப்பள்ளிக்கு தினந்தோறும் வேன், பஸ் மூலம் மாணவர்களை அழைத்து வருவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளியின்  பேருந்து வாகனத்தில் சுமார் 100க்கும்மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒக்கூர் ஆசிரியர் காலணி அருகில் வரும்போது குழந்தைகள் அழுவது கண்டு பேருந்தை நிறுத்தியிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். பேருந்து படிக்கட்டுகளில் ஒரு மாணவியும், பேருந்துக்குள் இரண்டு மாணவிகளும் மயங்கிய நிலையில் சுய நினைவு இன்றி இருந்திருக்கிறார்கள். 

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அந்த மாணவிகளை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் மதகுபட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மாணவிகள் வந்த வாகனத்தை மறைத்து வைத்து விட்டார்கள். இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி, வட்டார போக்குவரத்து அதிகாரி, வருவாய் கோட்டாச்சியர் போன்ற அதிகாரிகள் அந்த பள்ளி வாகனத்தின் உரிமையை ரத்து செய்வதோடு, பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க