”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது!"- கமல்ஹாசன் அதிரடி | Nobody can predict our future - Kamal haasan

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:08:00 (24/03/2019)

”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது!"- கமல்ஹாசன் அதிரடி

"மக்கள் நீதி மய்யத்திலிருந்து அவர்கள் விலகுவதாகச் சொல்லவில்லை. அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் அல்ல" என்று கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

 

கோவை கொடிசியாவில் மக்கள் நீதி மய்யத்தின்  வேட்பாளர் அறிமுக விழா இன்று நடக்கவிருக்கிறது. அதற்காக நேற்று கோவை வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், " வேட்பாளர் அறிமுக விழாவிற்கு வருகின்றவர்களை வருக வருக என கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் இருக்காது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அவர்கள் பிராத்தனையெல்லாம் எங்களின் எதிர்காலம் என்று எண்ண முடியாது என்றார்.  மக்கள் நீதிமய்யத்தில் நீண்டநாட்களாக உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அதுகுறித்து  தெளிவாக விளக்கப்படும். அந்த குறை  இருக்காது என்று நம்புகிறேன் என்றார். உங்கள் கட்சியில் முக்கிய பொருப்பாளர்கள் விலகுகிறார்களே என்று இறுதியாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் விலகுவதாக சொல்லவில்லை. அவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க