“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை | MDMK leader Vaiko slams PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:09:07 (24/03/2019)

“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை

வைகோ

ஒரே மொழி, ஒரே மதம், இந்துத்துவா என்ற திட்டத்தின் அடிப்படையில் தான் மோடி 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார் என வைகோ குற்றம் சாட்டினார்.

வைகோ

சாத்தூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு ஆதரவாக சாத்தூர், படந்தாள் உள்ளிட்ட இடங்களில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியவர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் முக்கிய தொழிலான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் முடங்கிப் போயுள்ளது. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்கப்படும். எனவே பொதுமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். மத்தியில் தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைந்தவுடன் தொழில்கள் மற்றும் விவசாயம் பாதுகாக்கப்படும். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணப்படும்.

ஒரே மொழி, ஒரே மதம், இந்துத்துவா என்ற திட்டத்தின் அடிப்படையில் தான் மோடி 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடன் வாழும் நிலை உறுதி செய்யப்படும். 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நிகழும் எனத் தெரிவித்தார்.