பழனி அருகே விபத்தில் தாய் பலி... - ஒரு லட்சம் செலவு செய்து சிறுவனை காக்கும் போலீஸ் எஸ்.ஐ! | Police SI protecting the boy who are helpless after mother died accident near palani

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (24/03/2019)

பழனி அருகே விபத்தில் தாய் பலி... - ஒரு லட்சம் செலவு செய்து சிறுவனை காக்கும் போலீஸ் எஸ்.ஐ!

மலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி ஈஸ்வரி தனது 5 குழந்தைகளுடன் பழநிக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார். நேற்று அதிகாலை பழநி வந்தவர் குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். மாலை வாடகை காரில் வரதமாநதியை பார்க்க போயிருக்கிறார்கள். பழநி அடிவாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். பழநி கொடைக்கானல் சாலையில் உள்ள வறட்டாறு பாலம் அருகே வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.

மனிதநேய போலீஸ் 

இந்த விபத்தில் ஈஸ்வரி, அவரது மகன் சஞ்சய், டிரைவர் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த சிறுவன் பழனி உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் காரில் பயணம் செய்த குழந்தைகள் சரவணன், சங்கவி, மஞ்சுளா, கைடு ராஜேஷ் ஆகியோர் சிறு காயத்துடன் தப்பினர். மருத்துவமனையில் இருந்த சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. உயர் சிகிச்சைக்காக கோவைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

மனிதநேய போலீஸ் 

அங்கிருந்த பழநி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் சாந்து ஆகியோர் சிறுவனை கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் சிறுவனை கவனித்து வரும் எஸ்.ஐ. ரஞ்சித்  சிகிச்சைக்காக தனது சொந்தப் பணம் ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்.

காவல் அதிகாரியின் இந்த மனித நேயம் பழநி மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. பழநியில் கைடுகள் என்ற பெயரில் ஏராளமான போலி கைடுகள் உலாவுகிறார்கள். தரிசனம் முடிந்ததும் அந்த இடம் சிறப்பாக இருக்கும். இந்த இடம் சிறப்பாக இருக்கும் எனப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பணத்தை வசூல் செய்வதை தொழிலாக வைத்துள்ளார்கள். போலி கைடுகள் குறித்த எச்சரிக்கை பல இடங்களில் போலீஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பழனி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க