'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை! | Kamalhassan event stopped by election officials

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:15:36 (24/03/2019)

'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை!

கமல்

மக்கள் நீதி  மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யத்தின்  தலைவர் கமல்ஹாசன் டாக்டர்களுடன்  கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இந்த தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்று தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் கூட்டம் நடத்தக்கூடாது என்றுகூறிக்  கூட்டத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தினர். 

இதனால், கூட்டத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு  கமல்ஹாசன் வெளியேறினார். இன்று மாலை கொடிசியாவில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், கமல்ஹாசன் நடத்திய கலந்துரையாடல் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது மக்கள் நீதி மய்யத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க