`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ!’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம் | admk cadres atrocities in ravendranathkumar meeting

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (24/03/2019)

கடைசி தொடர்பு:16:10 (24/03/2019)

`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ!’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கலந்துகொண்ட கூட்டத்தில் வேட்டி வாங்குவதற்காக அதிமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காகத் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக கடந்த இரண்டு மூன்று நாளாகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேனி மாவட்ட எல்லையான காடுரோடு அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். இவரது முதல் நாள் பிரசாரமே சர்ச்சைகளுக்கு உள்ளானது. முதல் நாள் பிரசாரத்தின் போது அவரது பிரசார வாகனத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் எதுவும் இல்லாமல், அ.தி.மு.க கொடி மட்டும் இருந்தது.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியாக உடனே சரி செய்து கொண்டார். இந்நிலையில் இன்று தேனி தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் ரவீந்திரநாத் குமார். அப்போது தொகுதிக் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் தொடர்பாக ஆலோசித்தவர், அவர்களிடம் தனக்காக வாக்கு சேகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு வேட்டி வழங்கப்பட்டது.

அதிமுக

அந்த வேட்டியை வாங்க மண்டபத்துக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வேட்டியை வாங்க முண்டியடித்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். இதேபோல் இந்த நிகழ்வின் போது வந்திருந்தவர்களை `டீ' கொடுக்கப்பட்டது. அங்கிருந்த அ.தி.மு.கவினர் சிலர் ``டீ''யை தாங்கள் கொண்டுவந்த வாட்டர் கேன்களில் அடைத்துச் சென்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க