செயற்குழு உறுப்பினர்களுக்கு ராகுல் அழைப்பு - இன்று வெளியாகுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை? | Congress to release it's election manifesto today?

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (25/03/2019)

செயற்குழு உறுப்பினர்களுக்கு ராகுல் அழைப்பு - இன்று வெளியாகுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

காங்கிரஸ் ராகுல் காந்தி

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக செயற்குழு  உறுப்பினர்களை இன்று அலுவலகம் வர அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸுக்கான தேர்தல் தொகுதிப் பங்கீடு நேற்று முடிந்தது. அங்கு சரத் பவாரின் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தான் கட்சியிலிருந்து வெளியேற இருப்பதாகத் தெரிவித்த ஆடியோ வெளியான நிலையில் மகாராஷ்டிரா தொகுதிப் பங்கீடு பெருத்த சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் அங்கே நேற்று தனது தொகுதிப் பங்கீட்டை அறிவித்தது. 

இதையடுத்து அடுத்தகட்டமாக தேர்தல் தயாரிப்புகளுக்காகவும் அறிக்கையை இறுதிபடுத்துவதற்காகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை டெல்லி அக்பர் ரோட்டில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் இன்று கூட்டுகிறார். இதில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, நீட் மறு ஆய்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரங்களில் முன் மொழிந்தார். காங்கிரஸ் இன்று தனது தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் நிலையில் இன்றே அறிக்கை வெளியிடப்படலாம்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க