``சு.வெ-வுடன் செல்ஃபி” - மதுரையில் இளைய தலைமுறையைக் கவரும் நோக்கில் பிரசாரம் | Su.Vengateshan election campaign in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:36 (26/03/2019)

``சு.வெ-வுடன் செல்ஃபி” - மதுரையில் இளைய தலைமுறையைக் கவரும் நோக்கில் பிரசாரம்

மதுரைத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்காக, நேற்று மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடுசெய்திருந்த "சு.வெ-வுடன் செல்ஃபி’ நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

மதுரையில் சு.வெங்கடேசன்

இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மதுரைக்குப் புதியதாகும். மதுரை ஆரப்பாளையம் புதிய ரவுண்டானா பகுதியில், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களுடன் மொபைல் போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அவர்களுடன் உரையாடினார். கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பலர் சு.வெங்கடேசன் உருவ முகமூடி அணிந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிபற்றி செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரையை நேசிக்கும் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்று என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த செல்ஃபி நிகழ்ச்சி. வைகையை வணங்கி பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன். 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். மதுரையின் மாற்றம், விடியல் என்பது எங்களது குறிக்கோள். வரலாற்றுக்கே ஒளிவீசிய ஒரு நகரம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளது. எனவே, மதுரையை மீட்க வேண்டும் என்பது முக்கியமானது. அந்த அடிப்படையில்  பாரம்பரிய  முறையிலும்,  நவீன முறையிலும் எங்களது பிரசாரம் இருக்கும்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க