போக்ஸோவில் கைதான 72 வயது முதியவர்! - ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை  | 72 year old man arrested in pocso act for abusing 6 year old girl

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (25/03/2019)

கடைசி தொடர்பு:13:44 (25/03/2019)

போக்ஸோவில் கைதான 72 வயது முதியவர்! - ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை 

 போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான ராஜிவின் வீடு

சென்னையில் மாற்றுத் திறனாளியான ஆறு வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் 72 வயது முதியவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (72). இவரின் வீட்டில் மலர் (பெயர் மாற்றம்) என்பவர் தன்னுடைய ஆறு வயது மகளுடன் குடியிருந்து வருகிறார். மலரின் மகள் மாற்றுத்திறனாளி. இந்தநிலையில் ராஜியின் வீட்டிலிருந்து மலரின் மகளின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்குச் சென்றனர். அப்போது ராஜியின் செயலைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 போக்ஸோ சட்டத்தில் ராஜி கைதான எண்ணூர் காவல் நிலையம்  

இதையடுத்து மலரின் மகளை பொதுமக்கள் மீட்டனர். பிறகு அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர், விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராஜி. அதன்பிறகு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியில் சொன்னால் அம்மாவைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதைக்கேட்ட பொதுமக்கள் ராஜிக்கு தர்மஅடி கொடுத்தனர். வயது மூப்பு காரணமாக அசம்பாவிதச் சம்பவம் நடந்துவிடக்கூடாது எனக்கருதி அவரை எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

  போக்ஸோ சட்டத்தில்  கைதானராஜி

போலீஸார், ராஜிவிடமும் ஆறு வயதுச் சிறுமியிடமும் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது, மாற்றுத்திறனாளியான ஆறுவயதுச் சிறுமிக்கு 72 வயதாகும் ராஜி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜிவை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.