`ஒரு மாதமாக தலைமறைவு!'- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரணடைந்த மணிவண்ணன்! | one more person arrested in Pollachi sexual abuse issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:15:20 (25/03/2019)

`ஒரு மாதமாக தலைமறைவு!'- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரணடைந்த மணிவண்ணன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸில் புகார் தெரிவித்திருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணி என்கிற மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் அண்ணனை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கிய வழக்கில் பாபு, செந்தில், `பார்' நாகராஜ், ஆச்சிப்பட்டி வசந்தகுமார் மற்றும் மணி என்கிற மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் மீது பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் பாபு, செந்தில், `பார்' நாகராஜ், ஆச்சிப்பட்டி வசந்தகுமார் ஆகிய நான்குபேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நால்வரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவ்வழக்கில், போலீஸிடம் அகப்படாமல் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த மணி என்கிற மணிவண்ணன் இன்று கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நாகராஜன், மணிவண்ணனை 8 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க