`ஏழைகளுக்கு இலவசம், மற்றவர்களுக்கு 200 ரூபாய்க்கு டயாலிசிஸ்!- தமிழிசையின் `அழகு' முகம் | free dialysis for poor people humanity service done by Tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (25/03/2019)

கடைசி தொடர்பு:16:18 (25/03/2019)

`ஏழைகளுக்கு இலவசம், மற்றவர்களுக்கு 200 ரூபாய்க்கு டயாலிசிஸ்!- தமிழிசையின் `அழகு' முகம்

மிழகத்தில் இணையத்தில் அதிகமாக கேலி கிண்டலுக்குள்ளாகும் பெண் அரசியல் தலைவர்களில் தமிழிசை சௌந்தரராஜன் ஒருவர்.  உருவத்தை வைத்து அதிகமாகக் கேலி செய்வார்கள்.  ஆனால், தமிழிசை எதையும் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் தமிழிசை மற்றும் அவரின் கணவர் செளந்தரராஜன் ஆகியோர் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததால் தந்தை குமரி அனந்தன் தன்னிடத்தில் 6 மாத காலமாக என்னிடம் பேசலில்லை. மருத்துவக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, தந்தை குமரி அனந்தனுக்காக நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.

தமிழிசை

தந்தை சுற்றுப்பயணம் சென்றால் நானும் கூடவே இருப்பேன். எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று தந்தை கைதாகி சிறையில் இருந்தார். தந்தையைக் காண நான் சிறைக்குச் சென்றேன். அப்போது, என்னுடன் வந்திருந்த யசோதா, `பாப்பா நல்லா பேசுது அரசியலுக்குக் கொண்டு வாருங்களேன்'  என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான் என் தந்தை கடும் கோபமடைந்தார்.  `வாரிசு அரசியலை ஒரு போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் வாரிசு ஒரு போதும் அரசியலுக்கு வராது' என்று வெளிப்படையாகக்  கூறிவிட்டார். ஆனால், எனக்குள் அரசியல் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதனால்தான்  அரசியலுக்குள் நுழைந்தேன். தந்தை என்னிடத்தில் பேசாமல் இருந்தது ஆறாத வடுவாகவே இருந்தது. இணையத்தில் என்னைப் பற்றி என்ன என்னவோ  எழுதுகிறார்கள். ஆனால், நான் ஒருமுறைகூட பெயிலானதில்லை. அரியர்ஸ்கூட வச்சது இல்லை என்று தமிழிசை கூறினார்.

தமிழிசை

கிராமங்களிலும் டயாலிசிஸ் திட்டம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு டாக்டர். சௌந்தரராஜன் கூறுகையில், ``சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்த்தன் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தார். டீ சாப்பிட்ட அறையிலிருந்து 4 பைப் லைன்கள் செல்வதைப் பார்த்து என்னவென்று கேட்டார். அப்போது, 2 மெஷின்கள் வச்சு ஏழைகளுக்கு இலவசமாகவும்  மற்றவர்களுக்கு 200 ரூபாய்க்கும் டயாலிசிஸ் பண்றேன். தமிழிசைதான் அதைப் பார்த்துக்கொள்கிறார் என்று அவரிடத்தில் சொன்னேன். உடனடியாக அது பற்றிய அறிக்கை ஒன்று தயாரித்து தருமாறு எங்களிடத்தில் கேட்டார்.  ஆனால், அதற்குள் அமைச்சரவை மாறிவிட்டது. ஜே.பி. நட்டா சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். இனிமேல் நமது திட்டம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டோம். திடீரென்று, ஒரு நாள் ஜே.பி. நட்டா கூப்பிட்டார். `உங்கள் திட்டம் குறித்து ஹர்ஷவர்த்தன் குறிப்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். டெல்லி வந்து நேரில் விவாதிக்க முடியுமா ' என்று சொன்னார். அப்படித்தான் பிரதம மந்திரியின் கிராமங்களிலும் டயாலிசிஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது'' என்றார்.

டாக்டர். தமிழிசை மற்றும்  டாக்டர் செளந்தரராஜன் பேட்டியைப் பார்த்த பிறகு `இதுதான் உண்மையான அழகு ' என்று அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க