``எய்ட்ஸால் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள்தான் நான் மருத்துவம் படிக்கக் காரணம்!’’ - ஐஷ்வர்யா ராவ் | Aishwarya Rao speaks about disabled rights and women financial aid

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (26/03/2019)

``எய்ட்ஸால் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள்தான் நான் மருத்துவம் படிக்கக் காரணம்!’’ - ஐஷ்வர்யா ராவ்

இங்கேயே தங்கிக்கலாம், சாப்பிடலாம். ஒரே ஒரு நிபந்தனைதான். அவங்க இந்த இடத்தை விட்டுப்போகும்போது இன்னொரு மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில உதவுவோம்னு ஒரு வாக்குக் கொடுக்கணும். அது மட்டும்தான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

``எய்ட்ஸால் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள்தான் நான் மருத்துவம் படிக்கக் காரணம்!’’ - ஐஷ்வர்யா ராவ்

முந்தைய பாகங்கள்

``புறக்கணிப்புகளே என் கிரீடம்!’’ - ரம்யா கிறிஸ்டினா

``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது!’’ - ரேச்சல் ரெபெக்கா

``தற்கொலைக்குத் துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா?’’ - ரம்யவர்ஷினி

``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது!’’ - சுனாமி சண்முகவேலின் போராட்டம்

  வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை! 

``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... 

இசையரசு - வெளியேற்றப்படும் மக்களுக்கான கலகக்குரல்! 

``அப்போ, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலதான் இருந்தோம். என்கூட படிச்ச, விளையாடிய குழந்தைங்க எல்லாரும் எய்ட்ஸ் பாதிப்பு வந்து மரணமடைஞ்சாங்க. அங்க நிறைய வறுமை. பெண்கள், வேலைக்காக பாம்பேக்குக் கிளம்பிப் போவாங்க. தப்பாப் பயன்படுத்தப்பட்டு, திரும்பி வரும்போது பாலியல்ரீதியான நோய்களோடு வருவாங்க. தனக்கு இப்படியான பாதிப்பு இருக்குன்னு தெரியாம கல்யாணம், குழந்தைகள்னு ஆகி, பல பேர் எய்ட்ஸுக்குப் பலியானாங்க. எய்ட்ஸ்ன்னா என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா, மருத்துவம்தான் படிக்கணும்னு நினைச்சத்துக்கு, கண்ணெதிர்ல நிகழ்ந்த இழப்புகள்தான் காரணம்” - குழந்தை நல மருத்துவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான செயற்பாட்டாளர், எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு செயற்பாட்டாளர் என ஐஷ்வர்யா ராவின் பரிமாணங்கள் பல. 

``பாலியல் கல்வி தரணும், பாதுகாப்பான உறவு வலியுறுத்தணும்னு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குப் பல விஷயங்கள் பேசுறாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம். குறிப்பா, பெண்களுக்கான பொருளாதார பலம். எம்.பி.பி.எஸ் முடிச்சு நான் வேலை செய்தது எய்ட்ஸ் நோயாளிகளிடம்தான். இப்போதும் நெருங்கப்படாமல் இருக்கிற பிரிவினர் அவங்க” - சரிசெய்ய நினைக்கும் பிரச்னைகளின் வேரை அறிந்துவைத்துக்கொண்டு, மனிதர்களை அணுகுகிறார் ஐஷ்வர்யா.

ஐஷ்வர்யா ராவ்

ஐந்து வயதில் போலியோ பாதிப்பால், சக்கர நாற்காலியின் துணையோடே நகர வேண்டிய நிலை ஐஷ்வர்யாவுக்கு. தனக்கு ஏற்பட்ட குறைபாட்டைப் பற்றி, கடந்த தடங்கல்களைப் பற்றி பேசுவதைவிட, செய்யக் காத்திருக்கும் வேலைகளைப் பற்றி மட்டுமே நிறைய பேசுகிறார்.

``நான் ஒரு தலித். அரசியல் பிடிக்கும்னு சொல்றதைவிட அரசியல் பேசுறது அவசியம்னு நினைக்கிறேன். என் பாட்டி 1960-ல பஞ்சாயத்துத் தலைவரா இருந்தாங்க. அந்த ஊர்லயே அவங்களுக்குக் கொஞ்சம் நிலமும் இருந்தது. அரசியல் வேலைகள் செய்து, இருந்த நிலத்தையும் கொஞ்சம் பணத்தையும் இழந்தாங்கன்னு அதுக்கப்புறம் வந்த எல்லாருக்கும் அரசியல் பயம். ஆனா, அப்படி இருக்கக் கூடாதே. பெண்களுக்குப் பொருளாதார பலம் வேணும். குறிப்பா, மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு. என்னுடைய பயணம் அவங்களுக்கானதுதான்” - அரசுக் கட்டடத்தில் தனிநபர்களும் சேர்ந்து இயக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் இலவச தங்கும் விடுதிக்குப் பொறுப்பாளராக இருக்கிறார் ஐஷ்வர்யா. 

``தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தும் இந்த வுமன் ஷெல்ட்டருக்கு வருவாங்க. மாற்றுத்திறனாளிப் பெண்ணாக இருப்பது மட்டும்தான் தகுதி. இங்கு வந்து வேலை தேடுறதோ, தொழில் தொடங்குறதோ... அவங்களுக்குத் துணையா நிற்போம். இங்கேயே தங்கிக்கலாம், சாப்பிடலாம். ஒரே ஒரு நிபந்தனைதான். அவங்க இந்த இடத்தைவிட்டுப் போகும்போது `இன்னொரு மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில உதவுவோம்’னு ஒரு வாக்குக் கொடுக்கணும். அதுமட்டும்தான் எங்க எதிர்பார்ப்பு” என்கிறார் ஐஷ்வர்யா. அரசுத் தொகை குறைவாக இருப்பதால், உதவும் பல நண்பர்களின் துணையோடு இந்தக் கூட்டை அன்பில் இயக்குகிறார்.

ஐஷ்வர்யா ராவ்

மூன்று மாதத்துக்கு முன்பாக ஐஷ்வர்யா தன் தாயை இழந்திருக்கிறார். ``குளிர்காலம் முழுசும் தூங்கியே கழிக்கும் மிருகத்தைப்போல, யாரையும் சந்திக்காம இருந்தேன். வேலைகள் இருக்கே” எனச் சொல்லும்போது, மறுபடியும் அதே உறுதியான தொனியில் ஒலிக்கிறார்.

``உடல்ரீதியான குறைபாட்டால், அயர்ச்சியால் உங்களுக்கு என்றாவது சலிப்புத் தோன்றியிருக்கிறதா?’’

``ஆமாம். மாற்றுத்திறனாளிகள் நலன், பெண்களுக்கான வேலைவாய்ப்புன்னு இயங்கும்போது விரக்தி வரும். ஆனா, நிறுத்த முடியாது. போராட்டம், ஆர்ப்பாட்டம் எதுவா இருந்தாலும் ரெண்டு விஷயத்துக்குதான், மரியாதையும் வாழ்வாதாரமும் பெண்களுக்கு வேணும். நாம எவ்வளவு தூரம் போகணும்கிறதுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உலகம் முழுக்க இருக்கிற வங்கிகள் எல்லாமும் எடுத்துக்கோங்க. தொழில் செய்ய பெண்களுக்குக் கிடைக்கிற கடனுடைய மொத்த சதவிகிதம் தெரியுமா. வெறும் ரெண்டு சதவிகிதம். பெண்கள் பேர்ல சொத்து இருக்காது. அதனால கடனும் கிடைக்காது” என்கிறார்.

டன் கணக்கில் நம்பிக்கையையும் எனர்ஜியையும் வாங்க நினைத்தால், ஐஷ்வர்யாவைக் கொஞ்சம் சந்தியுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்