`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு 72,000 ரூபாய்!' - ராகுலின் வாக்குறுதி | 5 Crore of the poorest families in India, will receive Rs. 72,000 Per Year says Rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:46 (26/03/2019)

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு 72,000 ரூபாய்!' - ராகுலின் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி 20 சதவிகிதம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாள்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. கூடவே தேர்தல் அறிக்கைகளும் வெளியாகிவிட்டன. இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல தேர்தல் வாக்குறுதிகளுக்கான அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ``நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்க விரும்புகிறோம்.

ராகுல்

அதன் ஒருபடியாக குறைந்தபட்ச வருமானத்திட்டத்தைப் பயன்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டோம். இதன் மூலம் 25 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு 72,000 ரூபாய் பெற வழிவகை செய்யப்படும். வறுமையை நாங்கள் நிச்சயம் ஒழிப்போம். இப்படியொரு திட்டம் உலகில் எங்கும் செயல்படுத்தப்பட்டதேயில்லை. இந்த திட்டம் வலிமையானது, மிகவும் சிந்தித்து, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு. இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்துவிட்டோம். கடந்த 5 ஆண்டுகள் நாட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் நிதி பெரும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்'' என்றார்.