`உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்குப் பதில் சொல்லாதீங்க!’ - வேட்பாளரை இழுத்துச் சென்ற பா.ம.க நிர்வாகி | admk candidate Saravanan pulled out by pmk executive

வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:52 (26/03/2019)

`உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்குப் பதில் சொல்லாதீங்க!’ - வேட்பாளரை இழுத்துச் சென்ற பா.ம.க நிர்வாகி

``முதல்வர் சிறப்பாக மக்கள் சேவை செய்து வருகிறார்’’ என்ற வேட்பாளர் சரவணனிடம், பிரசாரத்துக்குச் செல்லும்போது மக்களிடம்  உங்கள் அணுகுமுறை சரியில்லை என்று பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே என்றார்கள். உடனே குறுக்கிட்ட பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர். ``இப்படி உண்மைக்குப் புறம்பான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம்’’ என்று கூறி இழுத்துச் சென்றார்.  

 

வேட்பாளர்

சேலம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளராகச் சரவணன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சித் தொண்டர்களோடு அண்ணா பூங்காவிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை 500-க்கும் மேற்பட்டவர்களோடு ஊர்வலமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

கலெக்டர் அலுவலகத்துக்குள் அ.தி.மு.க வேட்பாளர் சரவணன், அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், பா.ஜ.க மாவட்டத் தலைவர் கோபிநாத், பா.ம.க மாநில இணை பொதுச் செயலாளர் அருள், தே.மு.தி.க மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து சரவணனை வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே அழைத்து வந்தார்கள்.

பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு சரவணனிடம் மைக்கை நீட்டினார்கள், அவர்களிடம் சரவணன், ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வின் அமித்ஷா, மோடி அவர்களுக்கும், பா.ம.க தலைவர் ராமதாஸ் அவர்களுக்கும், தே.மு.தி.க கேப்டனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேட்புமனு 


நம் கூட்டணிக் கட்சியின் வெற்றி அண்ணார் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான ஆட்சியில் சேலத்தில் நான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். முதல்வர் சிறப்பாக மக்கள் சேவை செய்து வருகிறார்’’ என்ற வேட்பாளர் சரவணனிடம் பத்திரிகையாளர்கள் பிரசாரத்துக்குச் செல்லும்போது மக்களிடம் உங்கள் அணுகுமுறை சரியில்லை என்று சொல்லுகிறார்களே என்றார்கள். உடனே  குறுக்கிட்ட பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர், ``இப்படி உண்மைக்குப் புறம்பான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம்’’ என்று கூறி இழுத்துச் சென்றார்.  

பத்திரிகையாளர்கள் பா.ம.க அருளிடம், அவர் பதில் சொல்லட்டும் நீங்க ஏன் இழுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, காதில் கேட்டுக் கொள்ளாமல் வேட்பாளரை இழுத்துச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க