அசையும், அசையாச் சொத்துகள் - ஹெச்.ராஜா மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துப் பட்டியல்! | Assets details of the candidates of sivaganga constituency

வெளியிடப்பட்ட நேரம்: 07:24 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:53 (26/03/2019)

அசையும், அசையாச் சொத்துகள் - ஹெச்.ராஜா மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துப் பட்டியல்!

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா ஆகியோர் தங்களுடைய பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை தங்களது வேட்புமனுவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பெயரில் அசையும் சொத்துகள் 24,13,73,168 ரூபாய் எனவும் அவரது மனைவி பெயரில் 9,37,99,140 எனவும் குறிப்பிட்டுள்ளார். அசையாச் சொத்துகள் தன்னுடைய பெயரில் 22,88,89,303 ரூபாய் எனவும், மனைவி ஸ்ரீநிதி பெயரில் 22,96,67,413 ரூபாய் எனவும், கையிருப்பு தொகையாக மனைவியிடம் இருக்கும் இருப்பு தொகையையும் சேர்த்து 6,85,725 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ யில் இரண்டு வழக்குகளும், என்போர்ஸ்மென்ட்டில் இரண்டு வழக்குகளும், வருமானவரித்துறை பதிவு செய்த வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா

 

அதேபோன்று பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா பெயரில் அசையும் சொத்துகள் 50,97,544 ரூபாய் எனவும், இவருடைய மனைவி பெயரில் 19,12,417 ரூபாய் எனவும், கூட்டுக்குடும்பத்தில் 15,73,432 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். அசையாச் சொத்துகள் இவருடைய பெயரில் 77,90,000 எனவும், மனைவி லலிதா பெயரில் 94,50,000 எனவும், கூட்டுக்குடும்பத்தில் 4,00,000 ரூபாய் எனவும் கையிருப்பாக கணவன், மனைவி ஆகியோரிடம் 1,25,000 ரூபாய் உள்ளது எனவும், கூட்டுக்குடும்பத்தில் 17,000 ரூபாய் கையிருப்பாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க