`உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மகனுக்குப் பரோல் வழங்கணும்!'- கண்கலங்கும் அற்புதம்மாள் | arputhammal asking parole for her son perarivalan

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:12:50 (26/03/2019)

`உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மகனுக்குப் பரோல் வழங்கணும்!'- கண்கலங்கும் அற்புதம்மாள்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் கூறியும், ஆளுநரின் காலதாமதத்தால் அவர்களின் விடுதலை தாமதமாகியுள்ளது. விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன. சமீபத்தில்கூட பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், குற்றம்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள ஏழு பேரையும் மனிதாபி மான அளவில் விடுதலை செய்ய வேண்டி தமிழகம் தழுவிய அளவில் பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குச் சிறுநீரகத் தொற்று தொடர்பான பிரச்னையும் இருப்பதால் மருத்துவ மனையில் இருந்தே தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை முடிந்து தற்போது சிறைக்குத் திரும்பியுள்ளார் பேரறிவாளன். மருத்துவ மனையில் உள்ள சிறைவாசிகளுக்கான அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை மீண்டும் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். 

அற்புதம்மாள்

ஆனால், இதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் ஆய்வுக்காக மீண்டும் ஒரு வாரம் கழித்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் தன் மகன், கணவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்குப் பரோல் வழங்கிட வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க