`நீட்'டுக்கு விலக்கு; செயற்பாட்டாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம்’ - மாணவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை | students islamic organization released its parliamentary election manifesto!

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (26/03/2019)

கடைசி தொடர்பு:14:35 (26/03/2019)

`நீட்'டுக்கு விலக்கு; செயற்பாட்டாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம்’ - மாணவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை

மாணவர்கள்

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டுவருகின்றன. இதற்கிடையே, ’மாணவர்களின் தேர்தல் அறிக்கை’ என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினரான சிராஜ் -உல்- ஹசன், ``இன்றைக்கு நாட்டின் மிக முக்கியப் பிரச்னைகளான கல்வி மற்றும் மனித உரிமைகள் குறித்தான முக்கிய அம்சங்கள், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகத் தங்களது பிரச்னைகளையும், விவகாரங்களையும் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு ஜனநாயகம் வழங்குகிறது.   தங்களது தேவைகளை முன்னிறுத்தி, மாற்றத்தை உண்டாக்கும்படியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தேர்தல்கள் மக்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மற்றும் செயல் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளக் கருதும்படியாக, “மாணவர் தேர்தல அறிக்கையை” இந்திய மாணவ இஸ்லாமிய அமைப்பு அனைத்து கட்சிகளிடமும் முன்வைக்கிறது” என்றார். 

அறிக்கையின் முக்கிய அம்சங்களாக,”கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, எவ்வித சமரசமுமின்றி 6 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும். அனிதா போன்ற உயிர்ப்பலிகள் இனியும் நேராமல் இருக்க, நீட் விலக்கு அளிக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக செயற்பாட்டாளர்கள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் தொடுக்கப்படுகின்றன. முகிலன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் காணாமல் போகிறார்கள். ஆகையால், செயற்பாட்டாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க