‘துரைமுருகன் மகன் சொத்து மதிப்பு ரூ.57 கோடி!’ - வேட்புமனுவில் தகவல் | Duraimurugan's son has assets worth Rs.57 crore!

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:15 (27/03/2019)

‘துரைமுருகன் மகன் சொத்து மதிப்பு ரூ.57 கோடி!’ - வேட்புமனுவில் தகவல்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.57 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்த துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவர், நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுவில், தனக்கு ரூ.57 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கதிர் ஆனந்த் பெயரில் 14 ,84,81,736 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 26,81,25,618 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன. அவரின் மனைவி சங்கீதா பெயரில் 1,14,30,466 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.14,12,64,661 மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளன.

மேலும், கதிர்ஆனந்தின் மனைவி பெயரில் 34,77,726 ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க மாற்று வேட்பாளராக கதிர்ஆனந்த் மனைவி சங்கீதா வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதில், சங்கீதா மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரிடம், ‘‘டம்மி வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறீர்கள். இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே கோபமடைந்த சங்கீதா, ‘‘டம்மி வேட்பாளர் என்று சொல்லாதீர்கள். அந்த வார்த்தை கேவலமாக இருக்கிறது. மாற்று வேட்பாளர் என்று சொல்லிப் பழகுங்கள்’’ என்று செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.