``மாணவிகளை டச் பண்ணி பேசுறதுதான் அவரின் முழுநேர வேலை!" - பேராசிரியர் மீது பாலியல் புகார் | Sexual complaint against Professor

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (26/03/2019)

கடைசி தொடர்பு:16:45 (26/03/2019)

``மாணவிகளை டச் பண்ணி பேசுறதுதான் அவரின் முழுநேர வேலை!" - பேராசிரியர் மீது பாலியல் புகார்

தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கரூர் அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறைத் தலைவருக்கு எதிராக மாணவர்கள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

கரூர் தான்றிதோன்றிமலையில் இயங்கி வருகிறது அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட இருபால் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன், ஆய்வு படிப்பும் உள்ளது. இக்கல்லூரியில் பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் இளங்கோவன்பொருளியல் துறைக்குத் தலைவராக இருப்பவர் முனைவர் பேராசிரியர் இளங்கோவன். இவருக்கு வயது 52. கடந்த சில நாள்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி சுரேந்தர்(மாணவர்)முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இளங்கோவன் மீது இப்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று அரசு கலைக் கல்லூரி முன்பு திரண்ட மாணவ, மாணவிகள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கத் திரண்டனர். கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மாணவர் சுரேந்தர் என்பவர்,  ``அரசு கலைக் கல்லூரி பொருளியல் துறை மாணவிகளுக்கு இளங்கோவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது குறித்து புகார் அளித்தும், அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ள கல்லூரி முதல்வர் தாமதப்படுத்துகிறார். தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். காவல்துறையும் இன்று மாலைக்குள் அவரை கைது செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி

மாணவிகளை டச் பண்ணிதான் எப்போதும் பேசி இருக்கிறார். `ஆசிரியர்தானே..' என்று முதலில் சாதாரணமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளங்கோவன், மாணவிகளிடம் எல்லை மீறவேதான், அவருக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளோம். அவரை உடனே கைது செய்யணும். கல்லூரி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.

இதனிடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளின் புகார் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பேராசிரியர் இளங்கோவன் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.