`எட்டு வயதுதான்; ஆனால் பிசினஸ் விருது!' - கலக்கும் சிறுமி இஷானா | 8 year girl ishana got young entrepreneur award

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:18:40 (26/03/2019)

`எட்டு வயதுதான்; ஆனால் பிசினஸ் விருது!' - கலக்கும் சிறுமி இஷானா

வீட்டிலேயே சாஃப்ட் டாய்ஸ்கள் தயாரித்து அதை ஸ்டால்கள் மூலம் விற்பனை செய்யும் சென்னையைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, இஷானா எம்.எஸ்.எம்.இ வழங்கக்கூடிய `யங் சோஷியல் ஆன்டர்பிரனர்' விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து இஷானாவிடம் பேசினோம்.

இஷானா

``எனக்கு சாஃப்ட் டாய்ஸ்கள் ரொம்பப் பிடிக்கும். அதனால் டாய்ஸ் செய்யும் முறையைக் கத்துக்கிட்டேன். அதன்பின் விதவிதமான கலர் மற்றும் டிசைனில் நான் ரெடி பண்ண பொம்மைகளைப் பார்த்த என் அம்மாவோட ஃப்ரெண்ட் ஒரு ஆன்ட்டி, இதையே பிசினஸாக பண்ணலாம்னு சொன்னாங்க. ஆரம்பத்தில் அதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குப் பதிலாக நான் தயாரித்த பொம்மைகளை, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினேன். அடுத்தடுத்து ஆதரவற்ற குழந்தைகள், ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குனு நிறைய பொம்மைகளை வழங்கினேன்.

இதைத் தொடர்ந்து செய்யப் பணம் தேவைப்பட்டதால் காலேஜ், ஸ்கூல் போன்ற இடங்களில் ஸ்டால்கள் அமைச்சு நான் தயாரித்த பொம்மைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையில் மற்றவர்களுக்கு உதவி செய்துட்டு வந்தேன். என்னுடைய பிசினஸில் ஒரு சின்ன டெக்னிக்கை ஃபாலோ பண்ணினேன்.என்னிடம் ரெண்டு பொம்மைகள் வாங்கினால் மூன்றாவதாக நான் ஒரு பொம்மையை இலவசமாகத் தருவேன்.அந்த பொம்மையை அவர்களே ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனாமாக வழங்க பாக்ஸ் வைத்து கலெக்ட் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து வந்தேன். இதனால் சர்வீஸாக கொடுக்கும் பொம்மைகளின் எண்ணிக்கை டபுள் மடங்கு ஆகியது. மேலும் பெரியபாளையத்தில் பார்வைக் குறைபாடு உடைய 50 பேருக்கு பொம்மை தயாரிக்கும் பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழிவகுத்துள்ளேன்.அதற்காகக் கிடைத்ததுதான் இந்த விருது" என்கிறார் மகிழ்ச்சியாக!