`எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது!' - சேலம் அ.ம.மு.க வேட்பாளர் உறுதி | It's easy to do politics against the chief minister says ammk candidate

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (26/03/2019)

கடைசி தொடர்பு:19:06 (26/03/2019)

`எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது!' - சேலம் அ.ம.மு.க வேட்பாளர் உறுதி

``அ.தி.மு.க., தி.மு.க எங்களுக்குப் போட்டியாக இருக்க முடியாது. தி.மு.க முடிந்து போன கட்சி. அ.தி.மு.க துரோகிகளின் கட்சி. நாங்கள் மக்களுக்குச் சேவை செய்வதை முனைப்பாக கொண்டு செயல்படுகிற கட்சி. சின்னம் கிடைக்கவில்லை என்பதற்காக எங்களுடைய வெற்றி பாதிக்காது. எங்களுக்கு எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்'' என்று கூறியுள்ளார் அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.கே.செல்வம்.

வேட்பாளர்

பெரும் ஆரவாரத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.கே.செல்வம் சேலம் கோட்டை மைதானத்துக்கு வந்திருந்தார். இங்கு 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்ட இடம் வரை ஊர்வலமாக வந்தார்கள். பிறகு வேட்பாளர் செல்வம் கலெக்டர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கல் செய்த பிறகு வெளியே வந்த வேட்பாளர் செல்வம், `ஒரு காலத்தில் ஒரு கட்சிக்கு ஓட்டு வங்கி இருந்திருக்கலாம். அந்த கட்சியே தற்போது காணாமல் போய் விட்டது. மகா கூட்டணி, மெகா கூட்டணி என்கிறார்கள். இனி கட்சிகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றி பெற முடியாது. மக்களின் எண்ணங்களை வைத்தே வெற்றி பெற முடியும்.

வேட்புமனு

நாங்கள் வாக்கைப் பிரிப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் வாக்கைப் பிரிப்பதற்கு வரவில்லை. நாங்கள்தான் வெற்றி பெறுவோம். எங்கள் வெற்றி உறுதியானது. அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தொண்டர்கள் இல்லை. கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைக்குச் செல்லும் பெண்களை மிரட்டி கூட்டங்களுக்கு கூட்டி வருகிறார்கள். பத்திரிகையாளர்கள் உண்மையை எழுத வேண்டும்.

அ.தி.மு.க., தி.மு.க எங்களுக்குப் போட்டியாக இருக்க முடியாது. தி.மு.க முடிந்து போன கட்சி. அ.தி.மு.க துரோகிகளின் கட்சி. நாங்கள் மக்களுக்குச் சேவை செய்வதை முனைப்பாக கொண்டு செயல்படுகிற கட்சி. சின்னம் கிடைக்கவில்லை என்பதற்காக எங்களுடைய வெற்றி பாதிக்காது. எங்களுக்கு எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். நாங்கள்  உண்மையான இந்த மண்ணின் மைந்தர்கள். அதனால் முதல்வர் எடப்பாடியை எதிர்த்து அரசியல் செய்வது சுலபம். எந்தக் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை விலைக்கு வாங்க முடியாது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க