`நாங்கள் மதங்களை நம்பவில்லை; மக்களை நம்புகிறோம்!' - அ.ம.மு.க வேட்பாளர் | We do not believe in religions; We Believe People says ammk candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (27/03/2019)

`நாங்கள் மதங்களை நம்பவில்லை; மக்களை நம்புகிறோம்!' - அ.ம.மு.க வேட்பாளர்

பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மதங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் நாங்கள் மக்களை நம்பி போட்டியிடுகிறோம் என அ.ம.மு.க. வேட்பாளர் இ.லட்சுமணன் தெரிவித்தார்.

லெட்சுமணன்


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.லெட்சுமணன் நாகர்கோவிலில்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக டதி பள்ளி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த இ.லெட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகள் என்னை எதிர்த்துப் போட்டியிடுகின்றன.

லெட்சுமணன்

அந்தக் கட்சிகள் மதங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், நாங்கள் மக்களை நம்பி போட்டியிடுகிறோம். நான் வெற்றி பெற்றால் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருவேன். மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் துறைமுகப்பணியை தடுத்து நிறுத்துவேன். வெற்றி பெற்ற 90 நாட்களில் மீனவர்களின் முக்கிய தேவையான ஹெலிகாப்டர் தளம் அமைக்க பாடுபடுவேன்" என்றார்.