`எங்கள் கட்சியில்தான் படித்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பு!' - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெருமிதம் | Our party has the opportunity for educators and newcomers says makkal needhi maiam candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (27/03/2019)

`எங்கள் கட்சியில்தான் படித்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பு!' - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெருமிதம்

மதுரை வேல்முருகன் நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (42). மக்கள் நீதி மய்யத்தின் மதுரை தெற்கு மாவட்டச் செயலரான இவர் அக்கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பாளர்

பின்னர் அவர் பேசியது, ``தேர்தலில் வெற்றி பெற்றால் விருதுநகரின் தேவைகளை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வேன். விருதுநகர் பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்வேன். கட்சி இருக்குமா? காணாமல் போகுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்வர். எங்கள் கட்சியில்தான் படித்தவர்களுக்கும், புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனத் தெரிவித்தார். சிவகாசியை குட்டி சிங்கப்பூர் என அழைப்பார்கள் என அவர் சொன்ன உடனே அருகே இந்த கட்சியினர் குட்டி ஜப்பான் எனக் கூறினர். உடனே வேட்பாளரும் குட்டி ஜப்பான் என மாற்றிக்கொண்டார்.