பிரமாணப் பத்திரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாத அ.ம.மு.க வேட்பாளர்! | details missing in ammk candidate affidavit

வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (26/03/2019)

கடைசி தொடர்பு:21:34 (26/03/2019)

பிரமாணப் பத்திரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாத அ.ம.மு.க வேட்பாளர்!

அ.ம.மு.க வேட்பாளர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் விடுபட்டுப் போயிருந்த விவரங்களை மீண்டும் சேர்க்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், மாலையே அனைத்து விவரங்களையும் அவர்கள் சேர்த்துவிட்டுச் சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். ஜெ.பேரவை இணைச் செயலரான இவர் அ.ம.மு.க சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் இன்று அவர் மனுத்தாக்கல் செய்தார். அப்போது அ.ம.மு.க மாவட்டச் செயலர் இன்பத்தமிழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆனால், வேட்பாளர் கொண்டு வந்திருந்த பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்துகள், நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு, வாகனம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறவில்லை. எனவே, பிரமாணப் பத்திரத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ள விவரங்களை நாளை காலை 9 மணிக்குள் சேர்க்க வேண்டும் என அவகாசம் அளிக்கப்பட்டது.

அமமுக

இதனால் அ.ம.மு.க-வினர் காலை முழுவதும் பதற்றத்துடன் இருந்தனர். பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அவசர அவசரமாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்ற அசையும் சொத்து, முதலீடு, வாகனம் உள்ளிட்ட விடுபட்ட விவரங்கள் முழுவதையும் சேர்த்து மீண்டும் மாலை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.