`காலை 8 மணிக்கு வெடித்துச் சிதறிய கட்டடம்!'- மன்னார்குடியில் பறிபோன 6 உயிர்கள் | death trolls increased in mannarkudi fire accident

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (27/03/2019)

`காலை 8 மணிக்கு வெடித்துச் சிதறிய கட்டடம்!'- மன்னார்குடியில் பறிபோன 6 உயிர்கள்

மன்னார்குடியில், பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பல வருடங்களாக இயங்கிவந்த பட்டாசு ஆலையில், இன்று காலை 8 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில், பட்டாசு ஆலை இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அருகே உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பட்டாசு ஆலை

இந்தப் பட்டாசு ஆலையில், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களுக்குத் தேவையான அலங்கார வாணவேடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் பல்வேறு வகையான வெடிகள் தயாரித்துவருகின்றனர். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கட்டடத்தின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், ஷேக் அப்துல்லா மற்றும் முத்து ஆகியோர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

பட்டாசு ஆலை

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர், இடிபாடுகளில் வேறு யாராவது சிக்கியுள்ளனரா என ஆய்வுசெய்தனர். இந்தச் சம்பவம்குறித்து மன்னார்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.